- புதிய பழமொழி
பழகப் பழக பாலும் புளிக்கும்
அது பழமொழி
என்னவளோடு ,
பழகப் பழக
புளித்த பாலும் இனிக்கிறதே
இது புது மொழி !
- விரல்களின் நாட்டியம்
தரையின் மீது அரங்கேறியது
அவள் விரல்களின் நாட்டியம்
பூத்தது ஒரு அழகிய பூக்கோலம் !
- தப்பித்தன மரங்கள்
நல்லவேளை இலைகளுக்கு
இறங்கி வரும் சக்தியில்லை
இருந்திருந்தால்
உன்
நடை பாதையில் இருக்கும்
அனைத்து மரங்களும்
கிளைகளாகக் கிடந்திருக்கும் !
- அதிர்ஷ்ட மலர்
அடடே !
மலரும் சற்று நுகர்கிறது
அவள் கூந்தல் வாசத்தை !
- இயற்கைக்கும் இடம் இல்லை
நிலத்தின் மீது
அவள் பாதம் பட,
நீரும் அழுதது
மழையாக
அவள் தேகத்தை தழுவ !
அழுகை சற்றே அதிகமானது
ஓ !
அவள் குடை விரித்து
நடக்க தொடங்கினாள்.